உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநி அடிவாரத்தில் நடமாடும் ஏ.டி.எம்.,

 பழநி அடிவாரத்தில் நடமாடும் ஏ.டி.எம்.,

பழநி: பழநி அடிவாரம் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக தனியார் வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம்., அமைக்கப்பட்டது. பழநி முருகன் கோயிலுக்கு கார்த்திகை மாதம் துவங்கியது முதல் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, கேரள மாநில பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்களுக்கு எளிதாக வங்கியில் இருந்து பணம் பெற்றுக்கொள்ள வசதியாக கோயில் நிர்வாகத்தில் அறிவுறுத்தலின் பேரில் தனியார் வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம்., அமைக்கப்பட்டுள்ளது. இதை கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து துவங்கி வைத்தார். எச்.டி.ஏப்.சி., வங்கி கிளை மேலாளர் தனபாலகிருஷ்ணன் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்