மேலும் செய்திகள்
2.25 கோடி ரேஷன் கார்டுகள் அமைச்சர் சக்கரபாணி
27-Mar-2025
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் முன்பு கார் மோதி தாய் பலியானார். காயமடைந்த மகள் சிகிச்சையில் உள்ளார்.ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டி ஏ.பி. காலனியை சேர்ந்த மோகன்ராஜ் மனைவி சரோஜாவும் 43, மகள் கீர்த்தனாவும் 9, காமாட்சி அம்மன் கோயில் முன்பு நேற்று முன் தினம் இரவு நடந்து சென்றனர். சிவகங்கை சென்ற கார் சென்டர் மீடியனில் மோதிய வேகத்தில் எதிர்பக்கத்தில் நடந்து சென்ற சரோஜா, கீர்த்தனா மீது மோதியது. இருவரும் பலத்த காயமடைந்தனர். சரோஜா நேற்று இறந்தார். கீர்த்தனா சிகிச்சையில் உள்ளார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Mar-2025