உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காதல் கொலையில் தாய், மகன் கைது

காதல் கொலையில் தாய், மகன் கைது

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே நடந்த காதல் கொலையில் தாய் ,மகன் கைது செய்யப்பட்டனர். நிலக்கோட்டை அருகே கூட்டத்து அய்யம்பாளையத்தில் மகளை காதலித்து திருமணம் செய்த ராமச்சந்திரனை 25, சந்திரன் 50, வெட்டி கொலை செய்ததில் கைது செய்யப்பட்டார். சமூக வலைத்தளத்தில் சந்திரன் மகன் ரிவின் 23, பேசிய ஆடியோ வைரலானது. கொலை குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரி கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து சந்திரன் மனைவி அன்புச்செல்வி 42, மகன் ரிவின் 23, ஆகியோரை நிலக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !