மேலும் செய்திகள்
நாளை நீட்தேர்வு: 3022 பேர் பங்கேற்பு
03-May-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடக்கும் மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை 7 மையங்களில் 3023 பேர் எழுதுகின்றனர்.சின்னாளப்பட்டி தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 360 , காந்திகிராம் பி.எம்.ஸ்ரீ., கேந்திரா வித்யாலயா பள்ளியில் 480 , காந்திகிராம் ஊரக பல்கலையில் உள்ள குருதேவ் அகாடமிக் வளாகத்தில் 263 , தாகூர் வளாகத்தில் 480 , என். கோவில்பட்டி துரைகமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 480 , திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480 , புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 480 பேர் என 3023 பேர் தேர்வு எழுதுகின்றனர்.மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், இருக்கை, மின் வசதிகள், கழிப்பறை, போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
03-May-2025