| ADDED : டிச 30, 2025 07:07 AM
வேடசந்துார்: பாலப்பட்டி ஊராட்சியில் முறையான காவிரி குடிநீர், வாரச் சந்தை பராமரிப்பு ,அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இந்த ஊராட்சி பகுதியில் தான் குடகனாறு செல்கிறது. இங்கே உள்ள அழகாபுரியில் தான் குடகனாறு அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி எப்போதும் ஓரளவிற்கு பசுமை யாகவே உள்ளது. பெரும்பாலான மக்கள் விவசாயம்,கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இளைஞர்கள், இளம்பெண்கள் நுாற்பாலை களுக்கு சென்று வரு கின்றனர். இப்பகுதியில் இதுவரை காவிரி குடிநீர் முறையாக செல்லாத நிலையில் தற்போது தான் ஊராட்சியில் 24 குடிநீர் காவிரி குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்குள்ள அழகாபுரி சீல்நாயக்கன்பட்டி பிரிவு, அழகாபுரி நால்ரோடு என இரு இடங்களில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, மின் இணைப்பு இல்லாமல் செயல்பாடற்ற நிலையிலே உள்ளது. இவைகளை முறைப்படுத்தி காவிரி குடிநீரை விரைந்து வழங்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். அழகாபுரி வாரச் சந்தையானது சுற்றுப்பகுதி மக்களுக்கு வசதியாக இருந்த நிலையில் காலப்போக்கில் இன்று சந்தை இருக்கும் இடம் தெரியாமல் நடந்து கொண்டு தான் உள்ளது. அழகாபுரி குடகனாறு அணை பகுதியை சுற்றுலா தல பகுதியாக அறிவித்து இங்குள்ள பூங்காவை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வருகிறது. சிதிலமடைந்த பூங்கா கே.பொம்முசாமி, சமூக ஆர்வலர், நாகமநாயக் கனுார்: எங்களது ஊர் பகுதிக்கு இதுவரை காவிரி குடிநீர் வரவில்லை. கேட்டால் தற்போது தான் மேல்நிலைத் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் வரும் என்கின்றனர். அழகாபுரி அணை அருகே உள்ள பூங்கா பகுதி சிதிலமடைந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது. பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும். அணையில் உள்ள கருவேல முட்களை அகற்றி துார் வரவேண்டும். தார் ரோடுகள் அமைப்பு பி.முத்துக்கிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர், அழகாபுரி: நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது தான் மாரப்பன்பட்டி ரோடு, பள்ளபட்டி ரோடு, ஈ.பி., ஆபிஸ் ரோடு என நான்கு தார் ரோடுகள் போடப் பட்டுள்ளன. பள்ளபட்டி அருகே குடகனாறு ஆற்றின் குறுக்கே ரூ.8 கோடி திட்ட மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 24 குக்கிராமங்களில் காவிரி குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.