உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  புதிய நீதிமன்றம் திறப்பு

 புதிய நீதிமன்றம் திறப்பு

திண்டுக்கல்: குஜிலியம்பாறையில் புதிய நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திரமோகன் ஸ்ரீவத்சவா காணொளி வயிலாக திறந்துவைத்தார். குஜிலியம்பாறையில் புதிதாக மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா வரவேற்றார். கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப், தலைமை குற்றவியல் நீதிபதி தீபா, நீதிமன்ற ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நீதிபதி முத்து சாரதா, மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிபதி தீபா ஆகியோர், நீதிமன்றத்தை பார்வையிட்டனர். வேடசந்துார் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முருகேசன், செயலாளர் பாலமுருகன் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ