உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புதிய குடிநீர் இணைப்பு பணி துவக்கம்

புதிய குடிநீர் இணைப்பு பணி துவக்கம்

நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது துவங்கப்பட்டுள்ளது.பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு புதிய குடிநீர் இணைப்புகள் வீடுகளுக்கு வழங்கப்பட்டது. அதன் பின் 2010ல் ரூ. 100 டெபாசிட் கட்ட அறிவிப்பு வெளியானது. இதில் நுாற்றுக்கணக்கான நபர்கள் டெபாசிட் கட்டினர். கிடப்பில் போடப்பட்ட நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் குடிநீர் இணைப்பு வேண்டி போராட்டங்கள் நடத்தினர். 2023 ல் ரூ.10,100 டெபாசிட் கட்ட அறிவிப்பு வெளியானது. அதில் 2010 டெபாசிட் கட்டியவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை எழுந்தது. அதன் பின் ஏராளமானோர் குடிநீர் இணைப்புக்காக டெபாசிட் கட்டினர். இந்நிலையில் நேற்று (மார்ச் 9) நெய்க்காரப்பட்டி பேரூராட்சி ஒன்றாவது வார்டு பங்களா தெற்கு தெருவில் வீட்டிற்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணி துவங்கியது.தலைவர் கருப்பாத்தாள், துணைத் தலைவர் சகுந்தலாமணி, பேரூர் செயலாளர் சையது அபுதாஹிர், செயல் அலுவலர் அன்னலட்சுமி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ