உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடமதுரை ஒன்றிய கவுன்சில் கூட்டம்

வடமதுரை ஒன்றிய கவுன்சில் கூட்டம்

வடமதுரை : வடமதுரை ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பேசுகையில், வேல்வார்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. சீலப்பாடியான் களத்தில் அகற்றப்பட்ட மேல்நிலை தொட்டிக்கு பதிலாக விரைவில் புதிய தொட்டி வேண்டும். எஸ்.குரும்பபட்டி, கிழக்கு, மேற்கு மலைப்பட்டி, பாகாநத்தம், முத்தனாங்கோட்டை கிராமங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களுக்கு கட்டட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பழைய சித்துவார்பட்டியில் இருந்து ஊத்துப்பட்டி வழியே நொச்சிகுளத்துபட்டி செல்லும் ரோடு, ஜி.குரும்பபட்டியில் இருந்து எத்தலப்ப நாயக்கனுார் ரோடு சேதமடைந்து மக்களுக்கு சிரமத்தை தருகிறது. மூக்கரபிள்ளையார்கோயில், ஆர்.புதுார் பஸ் ஸ்டாப்களில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை