| ADDED : டிச 27, 2025 06:22 AM
ஒட்டன்சத்திரம்: தமிழகத்தில் 374 ஆக இருந்த அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது'' என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். ஒட்டன்சத்திரம், புளியம்பட்டி, பாலப்பன்பட்டி புதூர், சண்முகவலசு ஆகிய பகுதிகளில் 3 பகுதி நேர ரேஷன் கடைகளை தொடங்கி வைத்து குடிமைப் பொருட்கள் வழங்கிய தொகுப்பினை வழங்கி அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இதுவரை 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளுக்கும் தார் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 629 கி.மீ., நீளத்திற்கு ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 374 ஆக இருந்த அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். பழநி ஆர்.டி.ஓ, கண்ணன், துணைப்பதிவாளர் செந்தில் வேல் பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் தங்கம் உடனிருந்தனர்.