ஒருவர் பலி
பழநி: பழநி கோதமங்கலம் நான்கு வழிச்சாலையில் பழநி எருமக்கார தெருவை சேர்ந்தவர் ராஜு 65. இவர் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) பழநி நோக்கி வந்து கொண்டிருந்தார். பின்னால் வந்த கார் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரிக்கின்றனர்.