உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொடை பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ள ஆர்கிட் மலர்கள்

 கொடை பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ள ஆர்கிட் மலர்கள்

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் ஆர்கிட் மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர். சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். நகரின் மையத்தில் உள்ள இப்பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை காண தவறுவதில்லை. இங்குள்ள கண்ணாடி மாளிகையில் ஏராளமான வகை மலர்கள் பாதுகாக்கப்படுகிறது. இச்சூழலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் தோட்டக்கலைத்துறை பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ஆர்கிட் மலர்கள் மற்றும் அந்தோரியம் செடிகளை மாளிகையில் அமைத்துள்ளது. அழகுற பூத்துள்ள இம்மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து இதன் பின்னணியில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். தோட்டக்கலைத் துறையின் நடவடிக்கை பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து எதிர்வரும் 63வது மலர் கண்காட்சிக்கான மலர்படுகைகள் தயார் செய்வதும் மலர் செடிகள் நடவுப் பணியும் தீவிரமடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !