மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
15-May-2025
பழநி:அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட தண்டபாணி நிலையத்திற்கு நேற்று மாலை வந்த அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அதன்பின் கோயிலுக்கு குடும்பத்தினருடன் ரோப் கார் மூலம் சென்றார் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்ட அவருக்கு கோயில் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. போகர் சன்னதி வழிபாட்டுக்கு பின் ரோப்கார் மூலம் திரும்பினார். முன்னாள் அமைச்சர் சீனிவாசன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வேணுகோபாலு, பரமசிவம் உடன் இருந்தனர்.
15-May-2025