உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊராட்சி எழுத்தர்களுக்கு கிடுக்கிப்பிடி

ஊராட்சி எழுத்தர்களுக்கு கிடுக்கிப்பிடி

வடமதுரை:வடமதுரை, குஜிலியம்பாறை, வேடசந்தூர் ஒன்றிய, ஊராட்சி உதவியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர், குடிநீர் பராமரிப்பு அலுவலர்கள், ஊராட்சி உதவியாளர்களும் பங்கேற்றனர். பழனிச்சாமி எம்.எல். ஏ., பேசியது:இக்கூட்டத்தில் தெரிவித்த தகவல்கள் தவறாக இருந்தால் இப்போதே திருத்தி கொள்ளுங்கள். ஊராட்சி செயல்பாடுகளில் தெரு, குடிநீர் பிரச்னைகள் முக்கியம். தெருவிளக்கு, குடிநீர் பராமரிப்பில் அலட்சியம் காட்டினால், அதிகாரிகள் மூலம் நெருக்கடியை சந்திக்க நேரிடும். குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை