மேலும் செய்திகள்
கொடைக்கானலில் ரம்யமான சீதோஷ்ண நிலை
11-Nov-2024
கொடைக்கானல் : கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில நாட்களாக கொடைக்கானலில் மிதமான மழை பெய்தது. நேற்று காலை முதல் வெயில் பளிச்சிட்டு இதமான சூழல் நிலவியது. மதியத்திற்கு பின் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. அவ்வப்போது நகரில் மேகக் கூட்டம் தரையிரங்கியது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, ரோஜா பூங்கா, வனச் சுற்றுலாத்தலம், கோக்கர்ஸ் வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையத்தை பயணிகள் ரசித்தனர். தொடர்ந்து ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி, ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
11-Nov-2024