உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுநகரங்களில் நிற்காமல் செல்லும் ரயில்கள்; சிரமத்தில் பயணிகள்; கொரோனாவுக்கு பிறகும் தொடர்வதால் பரிதவிப்பு

சிறுநகரங்களில் நிற்காமல் செல்லும் ரயில்கள்; சிரமத்தில் பயணிகள்; கொரோனாவுக்கு பிறகும் தொடர்வதால் பரிதவிப்பு

மாவட்டத்தில் எரியோடு, பாளையம், அய்யலுார், வடமதுரை, தாமரைப்பாடி, அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, அக்கரைப்பட்டி, சத்திரப்பட்டி, புஷ்பத்துார் என பல கிராமங்கள், சிறுநகரங்களில் ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றில் கொரோனா பிரச்னை ஏற்படும் முன்னர் பல ரயில்களும் நின்று சென்றதால் மக்கள் பயன்பெற்றனர். கொரோனா பிரச்னை ஏற்பட்டதும் சில மாதங்கள் தொடர்ச்சியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இயல்பு நிலை திரும்பிய பின்னர் சிறப்பு கட்டண விரைவு ரயில் என்ற பெயரில் புதிய எண்களில் ஒவ்வொன்றாக இயங்கப்பட்டன. ஆனால் ரயில்வே நிர்வாகம் நகரங்கள் மட்டும் பயன்பெறும் வகையில் நிறுத்தங்கள் அமைத்து இயக்கி வருகிறது. ஈரோடு திருநெல்வேலி, கோயம்புத்துார் நாகர்கோவில், பாலக்காடு திருச்செந்துார், விழுப்புரம் மதுரை, மயிலாடுதுறை செங்கோட்டை போன்ற ரயில்கள் தற்போது எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பல ஊர்களை புறம்தள்ளி விட்டு நகரங்கள் மட்டும் பயன்பெறும் வகையில் இயக்கப்படுகின்றன. இதனால் மாவட்டத்தில் எரியோடு, பாளையம் போன்ற பேரூராட்சி பகுதியினர் தங்கள் ஊரில் நின்று சென்ற ரயிலை பயன்படுத்த திண்டுக்கல் நகருக்கு செல்ல வேண்டியுள்ளது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு 20 நிமிடம் நடக்க வேண்டியுள்ளது. ஆட்டோவில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தேவையற்ற நேரம், பணம் விரயம், அலைச்சலும் ஏற்படுகிறது. சிறுநகரங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ரயில் போக்குவரத்து வசதியை செய்து தர ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ram pollachi
செப் 29, 2024 18:28

நினைத்த நேரத்தில் ஆம்னி பேருந்தில் பறக்க காசு இருக்கு ஆனால் குறைந்த கட்டணத்தில் இயங்கும் இரயில் வண்டி வேண்டுமா?இருந்த இடத்தை முன்னேற்ற முடியவில்லை வாழும் இடத்தையும் சர்வ நாசம் செய்து முடிச்சாச்சு இன்னும் அடங்க வில்லை பேராசை.... நல்ல வேளை இலவச இரயில் வண்டியை கேட்க வில்லை.


Ms Mahadevan Mahadevan
செப் 29, 2024 07:27

இதைத்தான் நான் பலமுறை சுட்டி காட்டினேன். எழியமக்களுக்கு பயன் படுத்தி வந்த இரயில் வண்டிகளை விரைவு வண்டி என்று கூறி பிஜேபி ஏமாற்றி வருகிறது. இரயில் நிலையஇத்தில் டூ வீலர் 10 நிமிடங்கள் நிறுத்தினாலும் 10 ரூபாய் வசூல். முன்பதிவு இல்லா பெட்டிகள் குறைப்பு, இப்படி பல கஷ்டங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறது பிஜேபி அரசு. நெல்லை டூ சென்னை இக்கு தினசரி முன்பதிவு இல்லா வண்டி வேண்டும் . பிஜேபி செய்யுமா?


அப்புசாமி
செப் 28, 2024 20:09

இதுக்குத்தான் விடியல் அரசின் லொடக்குபாண்டி பஸ்கள் இருக்கே. பெண்கள் டவுன் பஸ்ஸிலேயே ஓசீல போய் சென்னை வரைக்கும் போகலாம்.


அப்பாவி
செப் 28, 2024 06:42

எல்லோரும் மதுரை, திருச்சி, சென்னைக்கு குடி போயிருங்க. பிரதான் மந்திரிக்கி வந்தே பாரத் திட்டப்படி ரயிகள் அங்கே மட்டும்தான் நிக்கும். இன்னும் 350 விமான நிலையங்கள் கட்டப் போறாங்களாம். போயிட்டா ப்ளேன்லேயே போகலாம். நாமதான் வல்லரசு. சின்ராசு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை