ரோடுகளில் தேங்கும் மழைநீரால் மக்கள் அவதி...
பெயர் பலகையால் தடுமாற்றம் : திண்டுக்கல் ஒடுக்கம் ரோடு அருகே பெயர் பலகையில் உள்ள எழுத்துக்கள் அழிந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தாங்கள் செல்லம் இடங்களுக்கு செல்லமுடியாமல் தவிக்கின்றனர். பெயர் பலகையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெகதீஷ், திண்டுக்கல்.சேதமான நடைபாதை : திண்டுக்கல் பழநி ரோடு லாரி பேட்டை அருகே சாக்கடை நடைபாதை சேதம் அடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் பலர் கீழே விழுகின்றனர். நடைபாதையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமார், திண்டுக்கல்.---ரோட்டில் தேங்கும் மழைநீர் : எரியோட்டிலிருந்து கோவிலுார் செல்லும் நெடுஞ்சாலையில் புதுரோடு அருகே தார் ரோட்டில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இப்பகுதியில் சீரமைப்பு பணி செய்ய வேண்டும். ---செந்தில்குமார், எரியோடு.---மேடான ரோடால் விபத்து : ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டிலிருந்து மார்க்கெட் பைபாஸ் செல்லும் ரோட்டின் குறுக்கே 2 இடங்களில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த இடங்கள் உயரமாகவும் ரோட்டின் பகுதி தாழ்வாகவும் இருப்பதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.-வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம்.---அச்சுறுத்தும் குரங்குகள் : நத்தத்தில் அசோக்நகர் செட்டியார்குளத்தெரு, பஸ்ஸ்டாண்ட்,மீனாட்சிபுரம் பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். குரங்குகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வீரா, நத்தம்.---மின்கம்பத்தில் படர்ந்த செடிகள் : நிலக்கோட்டை தாலுகா அம்மைய நாயக்கனுார் பேரூராட்சி ஏ.புதுார் கிராமம் கொடைரோடு மெயின்ரோட்டில் மின் கம்பத்தின் மீது செடிகள் படர்ந்துள்ளது. இதனால் அடிக்கடி தீப்பற்றும் நிலை உள்ளது. செடிகளை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-க.ரதிஷ்பாண்டியன்,- பொம்மணம்பட்டி.-----தொற்று பரப்பும் கழிவுநீர் : பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சி 7வது வார்டு எஸ்.கே.சி. நகரில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முத்து, நெய்க்காரபட்டி.