உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குப்பை சீர்கேடுகளால் பரிதவிக்கும் மக்கள்

குப்பை சீர்கேடுகளால் பரிதவிக்கும் மக்கள்

பயனற்ற சுகாதார வளாகம்வடமதுரை சித்துாரில் ரூ.பல லட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பயனற்று கிடக்கிறது. தகுந்த பராமரிப்பு ஏற்பாட்டுடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கந்தசாமி, காணப்பாடி.------விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்திண்டுக்கல் அருகே கொட்டபட்டியிலிருந்து புதுப்பட்டி செல்லும் ரோட்டில் கேட் வால்வு பள்ளம் மூடாமல் உள்ளது. இரவு நேரத்தில் பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர். பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்திக், கொட்டபட்டி .-------குப்பையால் உருவாகும் சீர்கேடுதிண்டுக்கல் பழநி ரோடு முருகபவனம் அருகே குப்பை கொட்டி பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இங்குள்ள குப்பைகள் ரோட்டோரங்களில் பறந்து செல்கின்றன. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பையை வேண்டும். மனோஜ்குமார், திண்டுக்கல்.--------பட்டுப்போன மரத்தால் பரிதவிப்புதிண்டுக்கல் ஆர்.எஸ்.ரோட்டில் பட்டுப்போன மரம் உள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால் பட்டுப்போன மரக்கிளைகள் அடிக்கடி விழுந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சண்முகம், திண்டுக்கல்.---------கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்கள்திண்டுக்கல் மாலப்பட்டி ரோட்டில் அதிகளவில் மாடுகள் அங்கும் இங்கும் சுற்றுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சம்மந்தபட்ட அதிகாரிகள் மாடுகள் ரோட்டில் சுற்றுவதை தடுக்க வேண்டும். ஹரிஷ், மாலப்பட்டி.---------கழிவுநீரால் சுகாதாரக்கேடுதிண்டுக்கல் அருகே கொட்டபட்டி ரோட்டில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் குளம்போல் அப்பகுதி முழுவதும் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். பாண்டியன், திண்டுக்கல்.-----------கேபிள் ஒயர்களால் அச்சம்திண்டுக்கல் - திருச்சி ரோடு காந்திஜி நகர் செல்லும் வழியில் கேபிள் ஒயர்கள் மிக தாழ்வாக தொங்குகிறது. இவ்வழியில் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கழுத்தில் சுற்றி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஒயர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதி, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை