உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொற்று பரப்பும் கழிவுநீரால் பரிதவிக்கும் மக்கள்...

தொற்று பரப்பும் கழிவுநீரால் பரிதவிக்கும் மக்கள்...

தொற்று பரப்பும் கழிவுநீர் : நத்தம் பரளிபுதுாரில் அரசு நடுநிலைப்பள்ளி எதிரே உள்ள பாலத்தில் மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. கழிவு நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தங்கராஜ், பரளிபுதூர்.சேதமான ரோடால் அவதி : தாராபுரம்- ஒட்டன்சத்திரம் ரோட்டிலிருந்து திண்டுக்கல் பைபாஸ் ரோட்டுக்கு செல்லும் சர்வீஸ் ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.--செல்வம்,ஒட்டன்சத்திரம்.----திறந்தநிலையில் மின்கம்பம் : அய்யலுாரில் வாரச்சந்தை எதிர்புறம் இருக்கும் சர்வீஸ் ரோட்டில் உள்ள மின்கம்பத்தில் உள்ளி மின் பொருட்கள் திறந்தவெளியில் உள்ளது. இது தொடும் துாரத்தில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ----செந்தில், அய்யலூர்.------சகதியாகும் ரோடுகள் : சந்துார் கொடிக்கால்பட்டி தெற்கு தெருவில் ரோடு, சாக்கடை வசதி இல்லாதால் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி சகதியாக மாறி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கால்வாய் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பூமிநாதன், வேடசந்துார்.ஆபத்தை ஏற்படுத்தும் மின்கம்பம் : அம்மையநாயக்கனுார் வி.ஏ.ஓ., ஆர்.ஐ. அலுவலகத்திற்கு செல்லும் ரோட்டில் வளைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது. மழை நேரங்களில் மின்கசிவு ஏற்படுகிறது. விளக்கு இல்லாததால் இருட்டாக உள்ளது. மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.-முனியப்பன்,கொடைரோடு.-சீர்கேடை ஏற்படுத்தும் சாக்கடை : திண்டுக்கல் காந்தி மார்க்கெட் கோட்டைகுளம் ரோட்டில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. கழிவுகள் தேங்கியுள்ளதால் பாதிப்பு ஏற்படுகிறது. அதிக மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் துார்வாரி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரபு, திண்டுக்கல்.குப்பையால் பாதிப்பு : திண்டுக்கல் தோட்டனுாத்து பகுதி ரோட்டோரங்களில் குப்பை அள்ளப்படாமல் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையால் மண்வளம் பாதிக்கிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை வேண்டும்.-கந்தசாமி, தோட்டனுாத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை