உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பராமரிப்பில்லாத கழிப்பறை

பராமரிப்பில்லாத கழிப்பறை

எரியாத உயர் கோபுர விளக்குகள்திண்டுக்கல் - வத்தலக்குண்டு ரோடு பித்தளைபட்டி பிரிவில் உயர் மின் கோபுர விளக்கு இரவு நேரங்களில் எரியவில்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேஸ்வரி,பித்தளைபட்டி.--------கழிவுநீரால் சுகாதாரக்கேடுதிண்டுக்கல் கிழக்கு ரத வீதி பெங்காலி மார்க்கெட் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் வெளியே கசிந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரகாஷ், திண்டுக்கல்.---------குப்பையால் மக்கள் அவதிதிண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால் சிதறி கிடக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. முறையாக குப்பை தொட்டி வைத்து தினந்தோறும் குப்பையை அகற்ற வேண்டும். சக்திவேல், திண்டுக்கல்.----------கழிவு மணல்களால் பாதிப்புதிண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகே சாக்கடை கால்வாய் துார்வாரி கழிவுமண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றாமல் உள்ளதால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கழிவு மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்புசாமி,திண்டுக்கல்.----------அடிகுழாயால் ஆபத்துதிண்டுக்கல் குட்டியபட்டி ரோட்டில் உள்ள அடி குழாயால் போக்குவரத்து இடையூறாக உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். பயன்பாடின்றி உள்ள அடிகுழாயை அகற்ற வேண்டும். கந்தசாமி, குட்டியபட்டி.-----------சேதமான ரோடுகளால் தவிப்புதிண்டுக்கல் மேற்குரத வீதி நடுரோட்டில் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பாதசாரிகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் விபத்தும் நடக்கிறது. ரோடை சீரமைக்க வேண்டும். கர்ணன், மேற்கு ரத வீதி.-----------பராமரிப்பில்லாத கழிப்பறைதிண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் அருகே உள்ள கழிப்பறையை சுத்தம் செய்யாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் பயன்படுத்த முடியாமல் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும். கணேசன், திண்டுக்கல்.--------.................................................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை