உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கம்யூ.,பிரசாரத்தை ஏற்காத மக்கள்

கம்யூ.,பிரசாரத்தை ஏற்காத மக்கள்

வடமதுரை: பாடியூர் ஊராட்சிக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணிக்க வேண்டும் என இந்திய கம்யூ., செய்த பிரசாரத்தை மக்கள் ஏற்கவில்லை. ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்து வருகிறது. மகளிர் உரிமை தொகைக்கான மனுக்கள் பெறுவது முதன்மையாக இருப்பதால் இதற்கு மட்டும் கூடுதல் ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இதுதவிர 17 துறைகளின் ஸ்டால்கள் அமைத்து காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை மனுக்கள் பெறப்படுகின்றன. வடமதுரை பாடியூர் ஊராட்சியில் போதுமான வசதியுடன் இடம் இல்லாத நிலையில் ஊராட்சி எல்லையில் இருந்து 300 மீட்டர் தொலையில் முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள தனியார் மகாலில் முகாம் நடந்தது. பாடியூர் ஊராட்சிக்குள் நடத்தாமல் வெளியே முகாம் நடப்பதால் புறக்கணிக்க வேண்டும் என இந்திய கம்யூ., சார்பில் மக்களிடம் பிரசாரம் செய்தனர். இதை ஏற்காத மக்கள் முகாமில் பங்கேற்று மனுக்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ