| ADDED : ஜன 23, 2024 04:57 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வித்துறை கல்லுாரி களப்பயணத்திற்கு பிளஸ்2 மாணவர்கள் 2500 பேர் அழைத்து செல்லப்பட்டனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கல்லுாரிகளப்பயணம் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிளஸ்2 முடித்து என்ன படிப்பது,என்னபடித்தால் என்ன வேலைக்கு செல்லலாம்,நமக்கு எந்த படிப்பு சரியாக இருக்கும் என்பதையெல்லாம் தெரிந்து கொள்வதற்காக மாணவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லுாரிகள்,பல்கலைகளுக்கு கல்வித்துறை சார்பில் அழைத்து செல்லப்படுகின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் செய்துள்ளார்.நேற்று முதல்கட்டமாக 2500 மாணவர்கள் காந்திகிராமம் பல்கலை,அண்ணா பல்கலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.தொடர்ந்து இத்திட்டத்தின் மூலமாக மாணவர்கள் எம்.வி.எம்.கல்லுாரி,நிலக்கோட்டை அரசு கல்லுாரி,மதர் தெரசா பல்கலை, மருத்துவக் கல்லுாரிகள் என எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்லப்படுகின்றனர்.