உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பாலிடெக்னிக் ஆய்வகம் திறப்பு

 பாலிடெக்னிக் ஆய்வகம் திறப்பு

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் துறை ஆய்வுக்கூடம் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம் தரைத்தளம் மற்றும் முதல் தளம் 1281 சதுர மீட்டரில் கட்டப் பட்டுள்ளது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணைத் தலைவர் கந்தசாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை