பிரசவத்திற்கு பின் பெண் இறப்பு
நிலக்கோட்டை: நிலக்கோட்டை என். ஊத்துப்பட்டியைச் சேர்ந்த மகாராஜன் 27. இவருக்கும் கரட்டூரை சேர்ந்த அபிநயா 22க்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரசவத்திற்காக நேற்று முன் தினம் இரவு மட்டப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்க ஆண் குழந்தைபிறந்தது. ஒரு மணி நேரத்தில் ரத்தப்போக்கு ஏற்பட மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக கூறினர். விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் சர்மிளா விசாரிக்கிறார்.