உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு

வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு

திண்டுக்கல்; திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே வாலிபரை மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி தப்பினர். போலீசார் சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். திண்டுக்கல் ஆர். எம். காலனியை சேர்ந்தவர் சதீஷ் 35. நேற்று திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்றார். அப்போது டூவீலரில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சதீஷை வழிமறித்தனர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் வாக்குவாதம் முற்றியது. அப்போது 2 மர்ம நபர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து சதீஷ் மீது ஊற்றி தீ வைத்தனர். சதீஷ் தீ பற்றிய படி நடுரோட்டில் அங்கும் இங்கும் ஓடினார். அக்கம்பக்கம் இருந்தவர்கள் அவர் மீது எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் அவர் 60 சதவீதம் தீக்காயம் அடைந்தார். அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு பெட்ரோல் ஊற்றி எரித்து தப்பிய மர்ம நபர்களை கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தேடுகின்றனர். சதீஷ் ஏற்கனவே திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் முதியவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை