உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முடிவெட்டப்படாது பரிதவிக்கும் சிறை கைதிகள் தலையில் புண்களுடன் மாதக்கணக்கில் அவதி

முடிவெட்டப்படாது பரிதவிக்கும் சிறை கைதிகள் தலையில் புண்களுடன் மாதக்கணக்கில் அவதி

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறையில் முடிவெட்டப்படாது மாதக்கணக்கில் தவிக்கும் சிறை கைதிகள் தலையில் புண்களுடன் தவியாய் தவிக்கின்றனர்.திண்டுக்கல் மேற்கு தாலுகா ஆபிஸ் ரோட்டில் உள்ளது திண்டுக்கல் கிளை சிறை. இங்கு 200க்கும் மேலான கைதிகள் உள்ளனர். இங்கு நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளுக்கு பல மாதங்களாகியும் முடி வெட்டப்படவில்லை. இதனால் இவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர தலையில் புண்களுடன் பெரும் பிரச்னையை சந்திக்கின்றனர். இப்பிரச்னை மீது சிறை அதிகாரிகள் கவனம் செலுத்தி கைதிகளுக்கு முடி வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறை அதிகாரிகள் கூறியதாவது: சிறையில் உள்ள கைதிகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை முடி வெட்டப்படுகிறது. தவறு செய்து உள்ளே வரும் கைதிகளுக்கு முடி வெட்டுவது, சேவிங் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் போது அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்போது குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு சிரமம் ஏற்படுகிறது. இருந்தபோதிலும் எல்லா கைதிகளையும் முறையாக பராமரிக்க தான் செய்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை