உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தடகள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

 தடகள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

நத்தம்: திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் அத்லெட்டிக் பெடரேஷன் ஆப் இந்தியா ,தமிழக தடகள சங்கம் இணைந்து நடத்திய அஸ்மிதா லீக் மகளிர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்திய தடகள சம்மேளம் , இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து மத்திய அரசின் ஆதரவுடன் மாவட்டம் தோறும் அஸ்மிதா லீக் மகளிர் தடகள போட்டிகள் நடத்துகின்றனர். தமிழகத்தின் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் உட்பட 17 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. திண்டுக்கல் ஜி.டி.என்.கலை கல்லுாரியில் தடகள சங்கம் சார்பாக போட்டிகள் நடைபெற்றது. 225 வீராங்கனைகள் ,14,16 வயது பிரிவுகளில் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கு ரூ.66 ஆயிரம், பாராட்டு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. மாவட்ட தடகள சங்க பொருளாளர் துரைராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சங்க தலைவர் துரை, செயலாளர் சிவகுமார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை