உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூடுதல் ஆதார் மையங்களை திறக்க கோரி மறியல்

கூடுதல் ஆதார் மையங்களை திறக்க கோரி மறியல்

நத்தம்: நத்தம் பகுதியில் கூடுதாக ஆதார் மையங்கள் திறக்க வலியுறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். நத்தம், சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆதார் புதுப்பிக்கவும், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் இ-சேவை மையத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு பொது மக்கள் கூட்டம் அதிகமானதால் நத்தத்தில் மூன்று இடங்களில் ஆதார் சிறப்பு மையங்கள் 1 வாரம் அமைக்க கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டிருந்தார். அதன்படி நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம், கோவில்பட்டி கூட்டுறவு பால்பண்ணைகளில் சிறப்பு ஆதார் மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையங்களில் தினசரி 40 பேருக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் திரண்ட நிலையில் டோக்கன்கள் முடிந்துவிட்டது. 2 நாட்களுக்கு பின் வாருங்கள் என கூறினர். ஆத்திரமடைந்த மக்கள் ஆதார் மையங்களை கூடுதலாக திறக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதல் மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை