உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க.,சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தி.மு.க.,சாதனை விளக்க பொதுக்கூட்டம்

வேடசந்தூர்: வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், கிழக்கு மாரம்பாடியில், அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா, முன்னாள் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசினார். பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், நிர்வாகிகள் ஆரோன், தமிழ்ச்செல்வி, முருகன், மருதபிள்ளை, வின்சென்ட், தேவசகாயம், செந்தில்குமார், கார்த்தி, சுப்பிரமணி, மணிமாறன், சரவணன் பங்கேற்றனர்.-நத்தம் : செந்துறையில் நடந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், மாவட்ட பொருளாளர் விஜயன், துணை செயலாளர் ராஜாமணி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, துணை செயலாளர் துர்கா சங்கீதா, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன்,தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், நிர்வாகிகள் செல்லமணி, துரைராஜ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை