மதநல்லிணக்க கந்துாரி விழா
திண்டுக்கல் : திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் மத நல்லிணக்க மீலாது நபி கந்தூரி விழா நடந்தது. திண்டுக்கல் பேகம்பூர் அருகே உள்ள பூச்சி நாயக்கன்பட்டி ஜின்னா நகரில் பள்ளிவாசலில் ஒவ்வொரு வருடமும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். விழாவை அப்பகுதியை சேர்ந்த நண்பர்கள் குழு நடத்தி வருகின்றனர். 9வது ஆண்டாக நேற்று கந்தூரி விழா நடந்தது. இதில் 15,000க்கும் மேற்ப்பட்டோருக்கு நெய் சாதம், தால்சா வழங்கப்பட்டது. முன்னதாக சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜின்னாநகர், பூச்சி நாயக்கன்பட்டி, பேகம்பூர், யூசிபியா நகர் உட்பட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாத்திரங்களில் உணவுகளை வாங்கிச் சென்றனர்.