உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சந்தேக பணப் பரிமாற்றம் இருந்தால் தெரிவியுங்க

சந்தேக பணப் பரிமாற்றம் இருந்தால் தெரிவியுங்க

திண்டுக்கல் : அனைத்து வங்கியாளர்களின் மாவட்ட பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். எஸ்.பி., பிரதீப் பங்கேற்றனர். தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் வைப்புத்தொகை,செலவினங்களை வங்கி பரிவர்த்தனை மூலமே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இதுதொடர்பாக வங்கிக்கு வரும் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தனிக்கணக்கு தொடங்கிட வேண்டும். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளதால் வங்கிகளில் தனிநபரின் வங்கி கணக்கில் இருந்து சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பரிவர்த்தனை இருந்தால் அதுகுறித்து அறிக்கையினை தினமும் அனைத்து வங்கியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி கணக்குகள் உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய பண பரிமாற்றங்களை அனைத்து வங்கிகளின் கிளைகளைச் சார்ந்த வங்கியாளர்கள் கண்காணித்து, தினசரி அறிக்கையினை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம்(கணக்கு) சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ