உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோடு சேதத்தால் அவதிப்படும் பழநி 11வது வார்டு மக்கள்

ரோடு சேதத்தால் அவதிப்படும் பழநி 11வது வார்டு மக்கள்

பழநி; பழநி நகராட்சி பகுதியில் 11 வது வார்டில் சாலையில் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.ஆர்.சி. தெரசம்மாள் தெரு, தாடகை அம்மன் கோவில் தெரு, மதுரை வீரன் கோவில் தெரு, ராஜகோபால் பூங்கா தெரு பொன்காளியம்மன் கோவில் தெரு, கமிட்டி சுந்தரம் பிள்ளை தெரு, தேவேந்திரர் தெருவை உள்ளடக்கிய இந்த வார்டில் நாய் தொல்லை அதிகம் உள்ளது. போதை ஆசாமிகளால் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் சிரமம் அடைகின்றனர் இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநபர்கள் நடமாட்டம்

பிச்சமுத்து, ஆட்டோ டிரைவர், மதுரை வீரன் கோவில் தெரு : நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் தெருவில் பயணிக்கும் நபர்கள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. சாக்கடையை துார் வார வேண்டும். எங்கள் பகுதியில் வெளிநபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது இதனை கண்காணிக்க வேண்டும் .பொன் காளியம்மன் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை சரி செய்ய வேண்டும். ரேஷன் கடை புதிய தாக கட்டப்பட்டு வரும் நிலையில் அதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

பொது மக்களுக்கு சிரமம்

மாரியப்பன், டீக்கடை உரிமையாளர், பெரிய கடை வீதி: கமிட்டி சுந்தரம் பிள்ளை தெரு சேதமடைந்துள்ளது. அருகில் உள்ள சாலைகள் சரி செய்யப்படும் நிலையில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாலைகள் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதனால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். முதியவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.

கட்டுப்படுத்த நடவடிக்கை

பாசமலர், கவுன்சிலர் (தி.மு.க.,) : தெரசம்மாள் காலனியில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை கட்டப்பட்டு வருகிறது. பொன் காளியம்மன் கோயில் தெருவில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கமிட்டி சுந்தரம் பிள்ளை உள்ளிட்ட சாலைகளில் பணி விரைவில் செய்ய கோரிக்கை விடுத்துள்ளேன். நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். போதை ஆசாமிகள், வெளி நபர்கள் நடமாட்டம் குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளேன். பொன்காளியம்மன் தெரு அங்கன்வாடி மையம் விரைவில் சரி செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை