சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பழநி : பழநி கோட்டத்தில் 25 சதவீதத்திற்கு மேல் விதிமுறைகளை மீறி பதவி உயர்வு வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்தும் விதி மீறி வழங்கிய பதவி உறவு உயர்வுகளை திரும்ப பெறக்கோரி பழநி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் ஜோதி முருகன், நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டி, மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன், மருத்துவத் துறை பணியாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் மாணிக்கம் கலந்து கொண்டனர்.