வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Tetra
செப் 16, 2025 23:37
மீட்டாச்சு. அப்பறம்
பழனி:திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான, 1.40 ஏக்கர் நிலம் பழனி ஆண்டவன் பூங்கா ரோடு, சன்னிதி வீதியை இணைக்கும் வகையில் உள்ளது. இந்த இடத்தில் முட்செடிகள் அடர்ந்து இருந்தன. இதுகுறித்த வழக்கு பழனி சார்பு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான நிலத்தை கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் நேற்று சுத்தம் செய் து கையகப்படுத்தினர். இந்த நிலம், 60 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 100 கோடி ரூபாய். இங்கு அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் படும் என, கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மீட்டாச்சு. அப்பறம்