உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.81 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.81 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல் : உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.2,81,940 பறிமுதல் செய்யப்பட்டது.தேர்தல் நடத்தை விதிமுறை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் மா.மு.கோவிலுார் அருகே பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி பட்டாளம்பேட்டையைச் சேர்ந்த அப்துல்கலாம், தஞ்சாவூர் இந்தலுாரைச் சேர்ந்த அஜீத் ஆகியோர் வந்த வாகனத்தை சோதனை செய்தனர். உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1,86,150கைப்பற்றப்பட்டது.இதேபோல் நிலையான கண்காணிப்புக்குழுவினர் பள்ளப்பட்டி அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். சீலப்பாடியைச் சிவக்குமார் உரிய ஆவணமின்றி ரூ.95,790 - ஐ கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 2 இடங்களிலும் கைப்பற்றப்பட்ட ரூ.2,81,940 மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு கரூவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை