மேலும் செய்திகள்
வேகத்தடையில் விழுந்தவர் பலி
22-May-2025
செம்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வங்கி ஏ.டி.எம்.,ல் நிரப்புவதற்காக டூவீலரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 29 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.வத்தலக்குண்டு அருகே விருவீடு கிராமத்தை சேர்ந்தவர் நாகார்ஜூன் 30. இவர் தற்போது தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் வசித்து வருகிறார். தனியார் வங்கி ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்பும் ஏஜன்சி நடத்தி வரும் தேவதானப்பட்டியை சேர்ந்த முருகனிடம் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை டூவீலரில் பணத்தை எடுத்துக்கொண்டு வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, கே.சிங்காரகோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஏ.டி.எம்., சென்று பணம் நிரப்பினார். இதன் பின் சின்னாளபட்டி ஏ.டி.எம்., ல் பணம் வைப்பதற்காக ரூ. 29 லட்சத்தை கொண்டு சென்றார்.புதுகோடாங்கிபட்டி அடுத்த டாஸ்மாக் கடை அருகே சென்றபோது 3 பேர் இவரை வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விசாரணையில் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் டூவீலரில் வந்த மூவர் பணத்தை பறித்து கொண்டு தப்பியது உறுதியானது. அவர்கள்பயன்படுத்திய டூவீலர் பதிவு எண் தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தது என்பது தெரிய வர, பணத்தை பறிகொடுத்த நாகார்ஜூன் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் என்பதால் இவருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.
22-May-2025