குஜிலியம்பாறை: வேடசந்துார் சட்டசபை தொகுதியில் உள்ள வேடசந்துார், குஜிலியம்பாறை ஒன்றிய பகுதிகளில் ரூ. 6.85 கோடி திட்ட மதிப்பிலான விளையாட்டு அரங்கம், உயர் மட்ட பாலங்கள். தார் ரோடு என பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. எரியோடு பேரூராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு அரங்கம் பூமி பூஜையை எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். காங்., எம்.பி., ஜோதிமணி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, தாசில்தார் மணிமொழி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி, எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கவிதா, சுப்பையன், பாண்டி, பேரூர் செயலாளர்கள் செந்தில்குமார், கருப்பன், தி.மு.க., நிர்வாகிகள் ரவிசங்கர், பண்ணை கார்த்தி, மாரிமுத்து பங்கேற்றனர். குஜிலியம்பாறை ஆர்.புதுக்கோட்டை ஊராட்சியில் 1.6 கி.மீ., தார் சாலை , கூம்பூர் ரோட்டில் 2 உயர் மட்ட மேம்பாலம் பூமி பூஜை ,வண்ணானுாரில் சலவை தொட்டி திறப்பு விழா நடந்தது. இதை காந்திராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். எம்.பி., ஜோதிமணி, ஒன்றிய செயலாளர் சசி முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ.,க்கள் கற்பகம், அண்ணாதுரை, காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், வட்டார தலைவர் கோபால்சாமி, பொதுக்குழு உறுப்பினர் முரளி, தி.மு.க., நிர்வாகிகள் கருப்பையா, சுப்பிரமணி, சவுந்தர், கதிரவன், ராஜமாணிக்கம் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.