உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

சின்னாளபட்டி: சஷ்டியை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், பால், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. மூலவர், உற்சவருக்கு விசேஷ மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடந்தது. செம்பட்டி : கோதண்டராம விநாயகர் கோயில், தருமத்துப்பட்டி ராமலிங்க சுவாமி கோயிலில், சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. -நத்தம் : திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், பழம், மஞ்சள் நீர், விபூதி, தயிர், சந்தனம், புஷ்பம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை