உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் வெடிச்சத்தம் நில நடுக்கவியல் குழு ஆய்வு

திண்டுக்கல்லில் வெடிச்சத்தம் நில நடுக்கவியல் குழு ஆய்வு

திண்டுக்கல்,:திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ,வடமதுரை,வேடசந்துார், சாணார்பட்டி பகுதியில் கேட்கும் வெடிச்சத்தம் தொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் மைய அறிவியலாளர்கள் , வருவாய்த்துறை அலுவலர்களை கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது.இங்கு திடீர் வெடிச்சத்தம் ஏற்படுவதற்கான உரிய காரணங்களை கண்டறியவும் ,பொதுமக்களிடம் தெளிவுபடுத்தும் பொருட்டும் ஆய்வு செய்திட புவியியலாளர்கள், நிபுணர்கள் குழு ஒன்றை திண்டுக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரப்பட்டது. அதன்படி தேசிய நிலநடுக்கவியல் மையத்தை சேர்ந்த அறிவியலாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்களை கொண்ட குழுவினர் சத்தம் அடிக்கடி உணரப்படும் திண்டுக்கல் நகர், வேடசந்துாரை அடுத்த குளத்துார், பாடியூர், தும்மலக்குண்டு,வடமதுரை பகுதிகளில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு தொடர உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி