மேலும் செய்திகள்
ரூ.12 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
24-Sep-2024
கோபால்பட்டி : கோபால்பட்டியில் நேற்று நடந்த சந்தையில் ரூ.25 லட்சத்திற்கு மேல் ஆடுகள் ,கோழிகள் விற்பனையானது.கோபால்பட்டியில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. சுற்று கிராமங்களை சேர்ந்தவர்கள் கோழி, ஆடுகளை விற்பனை செய்ய இங்கு கொண்டு வருகின்றனர். புரட்டாசி முடிந்து ஐப்பசி தொடங்கியதை தொடர்ந்து நேற்று ஆடு, கோழி அமோகமாக விற்பனையானது.பொதுமக்கள், வியாபாரிகள் சந்தையில் குவிந்ததால் வியாபாரம் களை கட்டியது. எடைக்கு தகுந்தாற்போல் ரூ .15 ஆயிரம் வரையிலும் ஆடுகள் விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில் ரூ. 25 லட்சத்திற்கு ஆடுகள் , கோழிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
24-Sep-2024