உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் சர்க்கரை நோய் சிகிச்சை தனி பிரிவு

திண்டுக்கல்லில் சர்க்கரை நோய் சிகிச்சை தனி பிரிவு

திண்டுக்கல்: ''திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்காக தனி சிறப்பு சிகிச்சைப்பிரிவு செயல்பாட்டுக்கு வர உள்ளதாக,'' கல்லுாரி முதல்வர் வீரமணி கூறினார். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நாள்தோறும் 1100 உள்நோயாளிகள், 3500 வெளிநோயாளிகள் என 4600க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். நீரிழிவு நோயாளிகள் மட்டும் தினசரி 200க்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். நீரழிவு நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்வதற்காக டயாலிசீஸ் சிகிச்சை வசதியும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ளது. தற்போது சர்க்கரை நோயாளிகளுக்காக தனி சிகிச்சைப் பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நவ.14 முதல் செயல்படும். டயாலிசீஸ் செய்யும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் கூடுதலாக 5 கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ