உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அமலைச்செடிகளால் மாசடைந்துள்ள சண்முக நதி பக்தர்கள் கவலை

 அமலைச்செடிகளால் மாசடைந்துள்ள சண்முக நதி பக்தர்கள் கவலை

பழநி: பழநி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் புனித நீர்நிலையான சண்முக நதி பக்தர்கள் பயன்படுத்தும் இடத்தில் அமலைச்செடிகளால் மாசடைந்து உள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். பழநிக்கு ஐயப்ப, பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கோவை ரோட்டில் வரும் பக்தர்கள் சண்முக நதி பகுதிகளில் குளித்து நீராடிய பின் பழநி முருகன் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்வர். ஆனால் புனித நதியான சண்முக நதியில் சாக்கடை நீர் கலந்து அமலைச் செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால், பக்தர்கள் இங்கு குளிப்பதை தவிர்க்கின்றனர். அமலைச்செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை