உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்களில் சஷ்டி பூஜை

கோயில்களில் சஷ்டி பூஜை

ரெட்டியார்சத்திரம்: ஸ்ரீராமபுரம் அருகே ராமலிங்கம்பட்டியில் பாதாள செம்பு முருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு மூலவர், ஜலகண்டேஸ்வரர், விநாயகர், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் அபிஷேகம் நடந்தது. மூலவர், உற்ஸவருக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடந்தது.செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், தருமத்துப்பட்டி ராமலிங்க சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ