புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்
நத்தம்: -நத்தம் சுற்று கிராம பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணிக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், முருகன், ஜாபர் சாதிக் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு துறையினர் நத்தம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். 7 பெட்டிக்கடைகளில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. 2 கிலோ 800 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த துறையினர் தலா ரூ. 25 ஆயிரம் அபாரதம் விதித்தனர். கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.