உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கல சம்பளம்; குடும்பத்தை கவனிக்க முடியாது பெரும் பாதிப்பு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கல சம்பளம்; குடும்பத்தை கவனிக்க முடியாது பெரும் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில், நத்தம், வேடசந்துார், கொடைக்கானல், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, திண்டுக்கல் என ஏழு இடங்களில் அரசு கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக (தற்காலிக பணி) ஏராளமானோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இச்சம்பளமும் அவ்வப்போது முறையாக வராத நிலையில் தற்போது தான் மாதா மாதம் வருகிறது. இதிலும் ஆண்டுக்கு பதினோரு மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. மே மாதம் விடுமுறை என்ற நிலையில் மே மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படுவதில்லை. சம்பளம் இல்லாத நிலையில் மே மாதத்தில் பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணி, செமஸ்டர் தேர்வு பணி, மாணவர் சேர்க்கை பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லுாரி திறக்கப்பட்ட நிலையில் புதுமைப்பெண் பதிவேற்றம், தமிழ் புதல்வன் பதிவேற்றம், சான்றிதழ்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மே மாதத்தில் வீட்டு செலவுகள், குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்தல், வாகனச் செலவு, போக்குவரத்து செலவு என செலவு பட்டியல் நீளம் நிலையில் சம்பளம் இல்லாததால் மிக சிரமம் அடைகின்றனர். அரசு கல்லுாரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் முறையாக வழங்கவும், தற்போது வழங்கப்படும் மாதம் ரூ.25 ஆயிரம் பதில் ரூ.50,000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !