உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விதை உற்பத்தி, விதைச்சான்று நடைமுறைக்கு ஒரே இணையதளம்

விதை உற்பத்தி, விதைச்சான்று நடைமுறைக்கு ஒரே இணையதளம்

திண்டுக்கல்: விதை உற்பத்தி, விதைச்சான்று, விதை ரகங்கள் உள்பட விதைச்சான்று நடைமுறைகள் அனைத்துக்கும் ஒரே இணையதளம் துவங்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் சார்பில் அனைத்து மாநிலங்களிலும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தரமான நெல் தானியங்கள், காய்கறிகள் என அனைத்து விதைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் தரமான விதை வினியோகத்தை உறுதிப்படுத்தவும், விதைப்பண்ணை அமைத்தல், களஆய்வு, விதை பரிசோதனை என அனைத்து பணிகளும் ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில் 'சதி'(SATHI- seed tracebility authentication and holistic inventory) எனும் பெயரில் தனி இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.இந்த இணையதளம் மூலம், விதைப்பு அறிக்கை பதிவு, வயலாய்வு முத்திரையிடுதல், சுத்திப்பணி, மாதிரி எடுத்து பகுப்பாய்வு அறிக்கை பெறுதல், சான்றட்டை பொருத்தி தரமான விதைகளாக விநியோகம் செய்வது, விதைச்சான்று நடைமுறைகளையும் கண்காணிக்க முடியும். மாநிலம், மாவட்டம், தாலுகா வாரியாக உற்பத்தி செய்யப்படும் விதைகள் ரகங்களை பருவம் வாரியாக அறிந்துக்கொள்ளலாம். நாட்டின் மொத்த விதை உற்பத்தி வினியோகம், இறுதி இருப்பு விவரங்களை அறிந்து கொள்வதன் மூலம் அடுத்த பருவத்துக்கு தேவையான விதைகள் குறித்து விவசாயிகள் முன்கூட்டியே திட்டமிட முடியும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி