உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எஸ்.எஸ். ராஜன் கோப்பை திண்டுக்கல்,மதுரை அணிகள் தகுதி

எஸ்.எஸ். ராஜன் கோப்பை திண்டுக்கல்,மதுரை அணிகள் தகுதி

திண்டுக்கல்: திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரியில் நடந்த இதில் திண்டுக்கல்,கிருஷ்ணகிரி அணிகள் மோதின. கிருஷ்ணகிரி அணி 18.4 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்தது. முகமது 3 விக்கெட் எடுத்தார். திண்டுக்கல் அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தனர். விஜய்பிரகாஷ் 43,ஆஷிக் 38 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக மதுரை,திருப்பூர் அணிகள் மோதின.இதில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் ரிட்மேன் மைதானத்தில் நடந்த டி.20 போட்டியில் தென்காசி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தனர். நாமக்கல் அணி 16.3 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்தனர். கவினேஷ்32 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக சிவகங்கை அணி 18.2 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்தனர். தர்மபுரி அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்தனர்.இதன் தொடர்ச்சியாக பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரியில் நடந்த போட்டியில் கடலுார் அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தன . கமலக்கண்ணன் 63 ரன்கள் எடுத்தார். தென்காசி அணி 10 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது . மதன்பா44,சசிதரன் 3 விக்கெட் வீழ்த்தினார். பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரியில் நடந்த போட்டியில் நாமக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.தர்மபுரி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தன. டி பிரிவில் திண்டுக்கல் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்த சுற்று போட்டிகள் கோயம்புத்தூரில் பகல் இரவு போட்டிகளாக நடக்கும். ஹெச் பிரிவில் கடலுார் 3 வெற்றிகளுடன் முதல் இடத்தையும் சிவகங்கை 2 வெற்றிகளுடன் 2ம் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ