உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் கோடை மழை

திண்டுக்கல்லில் கோடை மழை

திண்டுக்கல்; திண்டுக்கல்லில் ஒரு வாரமாக மாலை நேரங்களில் பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. .திண்டுக்கல்லைப் பொறுத்தவரையில் மார்ச் துவக்கம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கி வந்தனர். பகலில் கொளுத்தும் வெயில் இரவில் உஷ்ணமாக மாறி வீட்டிற்குள் புழுக்கத்தை ஏற்படுத்துவதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.கோடை மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்த நிலையில் மே 7 முதல் மாலை, இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக 4 நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலைக்கு மேல் 30 நிமிடமாவது நல்ல மழை பெய்வதால் புழுக்கம் குறைகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ