உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் இன்று தைப்பூச தெப்பத்தேரோட்டம்

பழநியில் இன்று தைப்பூச தெப்பத்தேரோட்டம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவை தொடர்ந்து இன்றிரவு (ஜன., 28) தெப்பத்தேரோட்டம் நடக்கிறது.இக்கோயிலில் தைப்பூசத்திருவிழா கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஜன., 19ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவின் இரண்டாம் நாள் முதல் ஆறாம் நாள் வரை காலையில் தந்த பல்லாக்கில் சுவாமி திருவீதி உலா வந்தார். ஆறாம் நாளான ஜன.,24ல் வள்ளி, தெய்வானை, முத்துக் குமாரசாமி திருக்கல்யாணம், அன்றிரவு வெள்ளி தேரோட்டம் நடந்தது.ஏழாம் நாளான ஜன.,25ல் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடந்தது.இதையடுத்து இன்றிரவு தெப்பத் தேரோட்டம் நடக்கிறது. பின் கொடி இறக்குதலுடன் தைப்பூசவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !