உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  குதிரையாறில் மீன்பிடிக்க டெண்டர்

 குதிரையாறில் மீன்பிடிக்க டெண்டர்

திண்டுக்கல்: குதிரையாறு நீர்தேக்கத்தில் மீன்பிடிக்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட மீன்வளம், மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள குதிரையாறு நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் டிச.10 காலை 9:00 மணி வரை வரவேற்கப் படுகிறது. டிச.10 தேதி காலை 11:00 மணிக்கு சென்னை மீன்வளம், மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகத்தில் டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள், கூடுதல் விவரங்களுக்கு www.tnters.gov.inஎனும் இணையதள முகவரியில் காணலாம். விவரங்களுக்கு திண்டுக்கல் நேருஜி நகர் சாலையில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ஏல அறிவிப்பில் மாற்றங்கள் இருப்பின் இணையதளம் மூலமாக மட்டும் அறிவிக்கப்படும்'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை