உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கட்டட இடிபாடுகளால் நிரம்பும் தாடிக்கொம்பு நாச்சியார் குளம்

கட்டட இடிபாடுகளால் நிரம்பும் தாடிக்கொம்பு நாச்சியார் குளம்

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு நாச்சியார் குளத்தில் கொட்டப்படும் கட்டட இடிபாட்டுக் கழிவுகளால் குளம் நிறைந்து வருகிறது. குளம் காணாமல் போகும் முன் தேவையான நடவடிக்கைகளை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். தாடிக்கொம்பு உண்டார்பட்டி ரோட்டில் அரை கிலோமீட்டர் துாரத்தில் அமைந்துள்ளது தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு சொந்தமான நாச்சியார் குளம். இக்குளத்தில் மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீர் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது தேங்கி நிற்கும். இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள கிணறுகள் ,போர்வெல்களில் போதிய நீர் ஆதாரம் கிடைக்கும். தாடிக்கொம்பு நகர் பகுதிக்கு அருகிலே இக்குளம் அமைந்துள்ளதால் நகர் பகுதி வீடுகளின் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களிலும் குடிநீர் பிரச்னை இருக்காது. முக்கியத்துவம் வாய்ந்த இக்குளத்தில் சமீப காலமாக, வீடுகள் , ராட்சத கட்டடங்களில் இடிக்கப்பட்ட கட்டட கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து குளத்தின் மையப் பகுதியில் கொட்டி உள்ளனர். தொடர்ந்து இது போன்ற இடிக்கப்பட்ட கட்டட கழிவுகளை கொட்டி வரும் நிலையில், குளத்து பகுதியும் அருகில் உள்ள ரோடு பகுதியும் சமமாக நிலம் ஆக்கிரமிப்பு ஆகும் நிலையும் ஏற்படலாம் என்கின்றனர் மக்கள். தாடிக்கொம்பு பேரூராட்சி நிர்வாகம் நீர் நிலைகளின் நலன் கருதி குளத்துப் பகுதியில் கொட்டிய கட்டடக் கழிவுகளை அகற்றி மீண்டும் கொட்டாமல் இருக்கும் வகையில் சி.சி.டிவி., கேமரா அமைக்க முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை